'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் தாய்மொழியில் டைட்டில் வைத்தால் தான் வரிவிலக்கு என்கிற பிரச்சனை இல்லை. அதனால் தங்களது படங்களுக்கு கேட்சிங்கான ஆங்கில டைட்டில்களை வைத்து மிரட்டுகிறார்கள் மலையாள படைப்பாளிகள்.. அதேசமயம் அழகிய, வெகு நீளமான சுத்த மலையாளத்தில் பெயர் வைப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.. அந்தவகையில் மம்முட்டி புதிதாக நடிக்கவுள்ள படத்திற்கு 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' என டைட்டில் வைத்துள்ளார்கள். இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மம்முட்டி..
இந்தப்படத்தை இயக்கும் ஷாம்தத், பிரபலமான ஒளிப்பதிவாளர். கமலின் 'உத்தம வில்லன்', வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்-2' எல்லாம் இவரின் ஒளி வண்ணங்கள் தான். இவருக்குள் இருந்த படைப்பாளி விழித்துக்கொண்டு விட, இதோ இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகி கேரக்டரே கிடையாது என்பது ஆச்சர்யம்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொச்சி, பொள்ளாச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது..