600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ஜூனியர் என்.டி.ஆரின் திரை உலக வாழ்க்கையில் அவரது டெம்பர் திரைப்படம் முக்கிய அங்கம் வகிக்கின்றது. டெம்பர் படத்தில் அதிரடி ஆக்ஷன் முகம் காட்டிய ஜூனியர் என்.டி.ஆருக்கு அப்படமே ஆக்ஷன் ஹீரோ எனும் பெயரை பெற்றுத்தந்தது. ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்த இத்திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி டெம்பர் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமத்தை வாங்கியுள்ளார். டெம்பர் ஹிந்தி ரீமேக்கிற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளையும் ரோஹித் துவங்கிவிட்டார். இதனிடையே காஜல் அகர்வாலே டெம்பர் படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நாயகியாக நடிப்பதாக கூறப்படுகின்றது. செய்தியாளர்களைச் சந்தித்த காஜல் அகர்வால் டெம்பர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் நாயகனாக ரன்வீர் கபூர் நடிக்கக்கூடும் என்றும் காஜல் அகர்வால் கூறியுள்ளார்.