அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் பாபி இயக்கவிருக்கும் ஜெய்லவகுசா எனும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மூன்று வித கெட்டப்புகளில் நடிக்கவிருக்கின்றார் என ஏற்கனவே பார்த்தோம். இப்படத்தில் மூன்று வித வேடத்திற்கும் மூன்று வித கெட்டப்புகளை பாபி தேர்வு செய்துள்ளாராம். அதன்படி ஒரு வேடத்தில் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் ஜூனியர் என்.டி.ஆர் தோன்றவிருப்பதாகவும் அதற்காக தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுகட்டுப்பாடுகளிலும் ஜூனியர் என்.டி.ஆர் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இயக்குனர் பாபி இயக்கவிருக்கும் இப்படத்தை கல்யாண் ராம் தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். அஜித்தின் வரலாறு பட ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது எனும் தகவலை படக்குழு மறுத்துள்ளது. வரும் ஆகஸ்டில் இப்படத்தை திரைக்கு கொண்டுவர இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.