ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள திரையுலகத்தின் அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படமாக இருப்பது மெகாஸ்டார் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட் பாதர்' படம் தான். தனது ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் மூலமாக இந்தப்படத்தை தயாரித்துள்ளார் நடிகர் பிருத்விராஜ்... இந்தப்படத்தில் மம்முட்டியின் ஜோடியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் மீண்டும் நுழைந்திருக்கிறார் சினேகா. அதுமட்டுமல்ல நடிகர் ஆர்யா இந்தப்படத்தில் வில்லனாக மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை ஹனீப் அதேனி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம் இப்போது மார்ச்-30ல் ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக அவ்வப்போது .சீரான இடைவெளிகளில் இந்தப்படத்தில் மம்முட்டியின் அசத்தலான ஸ்டைலிஷான தோற்றங்களை கொண்ட போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.. மேலும் சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசரும் படத்திற்கான எதிர்பார்ப்பை இருமடங்காக்கி இருக்கிறது.