தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் படங்களில் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனிஒருவன் ராம் சரண் நடிப்பில் துருவா படமாகவும் கத்தி திரைப்படம் சிரஞ்சீவி நடிப்பில் கைதி நம்பர் 150 திரைப்படமாகவும் டோலிவுட்டில் ஹிட் அடித்தன. மேலும் அஜித்தின் வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராய்டு படத்தில் பவன் கல்யாண் நடித்து வருகின்றார். அஜித்தின் வேதாளம் பட ரீமேக்கில் கட்டமராய்டு படத்தை முடித்த பின்னர் பவன் கல்யாண் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவிருக்கும் ஜெய் லவகுச திரைப்படம் அஜித்தின் வரலாறு படத்தின் ரீமேக் என தகவல் கசிந்துள்ளது. ஜெய் லவகுச படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், தந்தை இரு மகன்கள் என மூன்று வேடங்களில் நடிப்பதாகவும், இப்படம் அஜித் நடித்த வரலாறு படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகின்றது. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அஜித் தந்தை மகன்கள் என மூன்று வேடங்களில் நடித்த வரலாறு திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.