ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த மே மாதம்ராஜீவ் ரவி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த 'கம்மட்டிப்பாடம்' படம் வெளியானது. இந்தப்படத்தை பார்த்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், “கம்மட்டிப்பாடம் மிகச்சிறந்த ஒரு கேங்ஸ்டர் படம்.. அதுமட்டுமல்ல, இந்தப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா' படத்தைப்போல மேக்கிங்கில் மிரட்டுகிறது. படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்கள்” என குறிப்பிட்டு பாராட்டினார். இந்த அளவுக்கு பாராட்டு பெற்ற இந்தப்படத்தில் துல்கர் சல்மான் தான் கதாநாயகன் என்றாலும் இன்னும் இருவர் படத்தின் பிரதான கதாபாத்திரங்களாக நடித்து ரசிகர்களின் கைதட்டலை அள்ளினர்..
ஒருவர் நமக்கெல்லாம் தெரிந்த 'திமிரு' புகழ் விநாயகன்.. இன்னொருவர் இந்தப்படத்தின் மூலம் அறிமுகமான மணிகண்ட ஆச்சாரி.. இந்த இருவரும் மிக யதாரத்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் பச்சக் என ஒட்டிகொண்டனர்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோதே இவர்கள் இருவரையும் பற்றி குறிப்பிட்டு வந்த துல்கர் சல்மான் இந்தக்கதையின் நாயகர்கள் இவர்கள் இருவரும் தான் என அவ்வப்போது பாராட்டியும் வந்தார்.. படம் வெளியான பின் அது உண்மையாகவும் ஆகிவிட்டது..