அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
பிருத்விராஜ் நடித்துவரும் புதிய படமான 'விமானம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி கொச்சி அருகில் உள்ள பகுதியில் நடைபெற்று வருகிறது.. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கமர்ஷியல் படமாக உருவாகிறது.
சில வருடங்களுக்கு முன் கேரளாவில் பரப்பரப்பான செய்திகளில் இடம்பிடித்தவர் தான் ஷாஜி தாமஸ்.. வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்ட இந்த ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்கவைத்தார். அந்த ஷாஜியின் கதைதான் இப்போது பிருத்விராஜின் 'விமானம்' படமாக உருவாகி வருகிறது. ஷாஜி கேரக்டரில் தான் பிருத்விராஜ் நடிக்கிறார்.
இந்தப்படத்தை எழுத்தால் பிரதீப் எம்.நாயர் என்பவர் இயக்குகிறார்.. இதில் பிருத்விராஜின் ஜோடியாக நடிப்பதற்கு புதுமுகம் ஒருவரை தேடிவந்தார் பிரதீப் நாயர்.. அப்போது கிளாசிக்கல் டான்சரான துர்கா லட்சுமி என்பவர் ஆடிசனில் கலந்துகொண்டாராம். இந்தப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண் கேரக்டரில் நடிப்பதற்கு அம்சமாக பொருந்தினாராம் துர்கா லட்சுமி..
இதனால் பல கட்ட தேர்வுக்குப்பின் அவரையே கதாநாயகியாக்கி விட்டாராம் பிரதீப் நாயர்.. முதல் படமே பிருத்விராஜூக்கு ஜோடியாக நடிக்கிறேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை என்கிறார் துர்கா லட்சுமி ஆச்சர்யம் விலகாமல்.