துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
மஞ்சு மனோஜ் நடிக்கும் குன்டுரோடு எனும் ஆக்ஷன் திரைப்படம் மார்ச் 3ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வருண் தயாரிப்பில் இயக்குனர் சத்யா இயக்கி வரும் குன்டுரோடு படத்தில் மஞ்சு மனோஜிற்கு ஜோடியாக நடிகை ப்ரக்யா ஜெய்ஸ்வால் நடிக்கின்றார். இசையமைப்பாளர் ஸ்ரீ வசந்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இப்படத்தின் அறிமுக காட்சிகளுக்கு பின்னனி பேசியுள்ளாராம். இதனை மஞ்சு மனோஜ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். மிகப்பெரும் நடிகரான சிரஞ்சீவி தனது படத்தில் பின்னணி பேசியதற்கு மகிழ்ச்சி அடைந்துள்ள மஞ்சு மனோஜ், குன்டுருடு படக்குழு சார்பில் சிரஞ்சீவிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிற நடிகர்களின் படங்களில் பின்னணி பேச தயங்கியதில்லை. அண்மையில் வெளிவந்த ராணாவின் காஸி படத்தில் சிரஞ்சீவி பின்னணி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.