இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'எஸ்றா' என்கிற ஹாரர் த்ரில்லர் படத்தில் நடித்தவர் தான் ஆன் ஷீத்தல்.. மும்பையை சேர்ந்த நடிப்பு பள்ளியில் படித்த இவர் மலையாளத்தில் இந்தப்படத்தின் மூலம் தான் அறிமுகமாகியுள்ளார். பத்து நிமிடங்கள் மட்டுமே வந்துபோகும் கேரக்டர் என்றாலும் நாற்பதுகளின் பின்னணியில் நடைபெறும் பிளாஸ்பேக் காட்சியில் சாதாரண கிராமத்து பெண்ணாக வந்து அழுத்தமான நடிப்பின் மூலம் கதையின் திருப்புமுனைக்கு காரணமாக அமைந்திருந்தது இவரது கதாபாத்திரம்..
துல்கர் நடிக்கும் புதிய படத்திற்கு இயக்குனர் சலாம் புகாரி என்பவர் ஹீரோயின் தேடிக்கொண்டிருந்த சமயத்தில் தான் ஏதேச்சையாக கடந்தவாரம் வெளியான இந்தப்படத்தை பார்க்க, அவரை ரொம்பவே கவர்ந்தது ஷீத்தலின் நடிப்பு. உடனே துல்கர் சல்மானின் கதாநாயகியாக ஆன் ஷீத்தலை ஒப்பந்தம் செய்துவிட்டார்.. 'பெங்களூர் டேய்ஸ்' புகழ் அஞ்சலி மேனனை போலவே இந்த சலாம் புகாரியும் இயக்குனர் அன்வர் ரஷீத்தின் சீடர் என்பதால் துல்கரை சந்தித்து கதைசொல்லி எளிதாக அவர் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.