ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தயாரிப்பாளர், பாடகி என பன்முகம் கொண்ட இளம் நடிகை லக்ஷ்மி மஞ்சு நீதிபதியாக நடிக்கும் லக்ஷ்மி பாம் எனும் நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். ஜெகபதி பாபு நடித்த சத்யம் நவ்தீப் நடித்த வசூல் ராஜா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கோபால கிருஷ்ணா லக்ஷ்மி மஞ்சுவின் லக்ஷ்மி பாம் படத்தை இயக்கவுள்ளார். மௌனிகா சந்திரசேகர், உமா லக்ஷ்மி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுனில் கஷ்யப் இசையமைக்கின்றார். மஞ்சு லக்ஷ்மியின் சகோதரரும் நடிகருமான மஞ்சு மனோஜ் லக்ஷ்மி பாம் படத்தின் இறுதிக்காட்சிகளை இயக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இப்படத்தை பிப்ரவரி 24ல் திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது.