ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடித்து வரும் பக்தி திரைப்படமான ஓம் நமோ வெங்கடேஷாய எனும் படத்தின் தலைப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரபல பக்தி பட இயக்குனர் கே.எஸ்.ராகவேந்திர ராவ் இயக்கியுள்ள இத்திரைப்படம் பெருமாள் பக்தரான ஹாத்திராம் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியது. இதற்கு முன்னர் தான் இயக்கிய படங்களுக்கு அன்னமைய்யா, பக்த ராமதாசு, ஸ்ரீரடி சாய் என புனிதர்களின் பெயர்களை சூட்டிய ராகவேந்திர ராவ் இம்முறை பெருமாள் பெயரை தேர்ந்தெடுத்துள்ளார்.
கிரிஜன் மற்றும் பஞ்சரா சேவ சங்க நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹாத்தி ராம் பாபா எனும் புனிதரைப் பற்றிய படம் என்பதால், அவரது பெயரே படத்திற்கு சூட்டப்பட வேண்டும் எனவும் பெருமாளின் பெயரை படத்தின் தலைப்பாக தேர்ந்தெடுத்தது தவறு எனவும் பஞ்சரா சேவ சங்க தலைவர் சங்கர் நாயக் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனராம். படத்தின் தலைப்பை மாற்றக்கோரி இயக்குனர் ராகவேந்திர ராவ்விடம் பேச்சு வார்த்தை நடத்த தீர்மானித்துள்ள இவர்கள் சாதகமான பதில் கிடைக்கவில்லை எனில் இப்பிரச்சனையை சட்டப்படி எதிர்கொள்ள தயாராகவுள்ளதாக கூறுகின்றனர்.