‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் சந்தீப் கிஷான் நாயகனாக நடிக்கும் நக்ஷத்ரம் படத்தில் ரெஜினா, ப்ரக்யா ஜெய்ஸ்வால் என இரு நாயகிகள் நடித்து வருகின்றனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் படக்குழு விரைவில் படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளனர். சாய் தரண் தேஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இப்படத்தில் ஜே.டி.சக்ரவர்தியும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். இயக்குனர் கிருஷ்ண வம்சியின் நெருங்கிய நண்பரான ஜே.டி.சக்ரவர்த்தி தமிழில் சமர், சர்வம், ஜீரோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் கிருஷ்ண வம்சி கேட்டுக்கொண்டதன் பெயரில் ஜே.டி.சக்ரவர்த்தி இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். போலீஸாக துடிக்கும் நாயகனை பற்றிய இப்படத்தில் நாயகன் சந்தீப் கிஷான் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கின்றாராம்.