டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குறைந்த பட்ஜெட்டில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நாணி, அடுத்ததாக நேனு லோகல் படத்தின் வெளியீட்டிற்கு தயாராகி விட்டார். நாணிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் நேனு லோக்கல் படத்தை, இயக்குனர் திரிநந்த ராவ் இயக்குகின்றார். தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். படப்பிடிப்புகளை முடித்த நாணி தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளில் பிசியாகவுள்ளார். இந்நிலையில் நேனு லோகல் படத்தை பிப்ரவரி 3ல் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளனர். அதன்படி படத்தின் புரமோஷன் பணிகளை முடுக்கி விட்டுள்ள இயக்குனர் திரிநந்த ராவ் நேனு லோகல் படத்தை தணிக்கை குழுவினருக்கு திரையிட்டுக் காட்டவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றாராம்.