ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் தற்போது கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடித்துமுடித்துவிட்ட நிவின்பாலி, இன்னொரு பக்கம் மலையாளத்தில் தனது நண்பர் சித்தார்த் சிவா இயக்கும் புதிய படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இந்தப்படத்தில் அவருடன் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக 'காக்கா முட்டை' புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, இன்னொரு கதாநாயகியாக காயத்ரி சுரேஷ் என்பவர் நடிக்கிறார். இதுநாள்வரை இந்தப்படத்திற்கு டைட்டிலே வைக்காமல் போஸ்ட் புரொடக்சன் வரை வந்துவிட்டவர்கள், தற்போது படத்திற்கு 'சகாவு' என டைட்டில் வைத்துள்ளார்கள்..
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்கள் தங்களுக்குள் 'தோழரே' என மரியாதையாக அழைத்துக்கொள்வது போல கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் ஒருவரை ஒருவர் 'சகாவு' என அழைப்பது வழக்கம். தடிட்டிளுக்கு ஏற்றமாதிரி இந்தப்படத்தின் கதையும் அரசியல் களத்தை மையப்படுத்தியே பின்னப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நிவின்பாலி அரசியல் தலைவர் கேரக்டரில் நடித்திருக்கிறார்..