'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தில் மிகவும் பாராட்டப்பட்ட கதாபாத்திரம் ரம்யாகிருஷ்ணன் ஏற்ற சிவகாமி வேடம். சிவகாமி கதாபாத்திரத்திற்கு நடிகை ஸ்ரீதேவி, தபு உள்ளிட்டோரை இயக்குனர் ராஜமௌலி அணுகினார். அவர்கள் மறுக்கவே சிவகாமி வேடத்தில் ரம்யாகிருஷ்ணனை இயக்குனர் ஒப்பந்தம் செய்தார். இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மஞ்சுவு சிவகாமி வேடத்தில் நடிக்க மறுத்ததாகக் கூறப்பட்டது. இது குறித்த விபரங்களை லக்ஷ்மி மஞ்சு தற்போது கூறியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் அலியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லக்ஷ்மி மஞ்சு, பாகுபலி படத்தின் கதையும், சிவாகமி கதாபாத்திர வடிவமைப்பும் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறிய லக்ஷ்மி மஞ்சு, சிவகாமி வேடம் தனது வயதிற்கு மீறி இருந்ததாகவும், பிரபாஸ், ராணாவிற்கு அம்மா வேடம் என்பதாலும் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்ததாக லக்ஷ்மி மஞ்சு கூறியுள்ளார். தான் பாகுபலி படத்தை நிராகரித்து விட்டதாக பலரும் கூறுகின்றனர். உண்மையில் பாகுபலி படத்தை நிராகரிக்கவில்லை சிவகாமி கதாபாத்திரத்தையே நிராகரித்ததாக லக்ஷ்மி மஞ்சு கூறியுள்ளார்.