இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு திரையுலகத்திற்கும் பல விதங்களில் பொருத்தம் உள்ளது. இரண்டு திரையுலகத்திலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கும், முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கும் ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பு இருக்கும். அதிலும் சில குறிப்பிட்ட ஹீரோக்கள், இயக்குனர்கள் படம் என்றால் கேட்கவே வேண்டாம், அளவுக்கதிகமான வரவேற்பு இருக்கும். அதிலும் சில கூட்டணிகளுக்கு மிகமிக அதிகமாக இருக்கும். அப்படி ஒரு அபரிமிதமான வரவேற்பை ஏற்படுத்தியுள்ள கூட்டணி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணிக்குக் கிடைத்துள்ளது.
இப்படத்தின் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தியேட்டர்களின் உரிமைகளுக்கு இப்போதே பலரும் போட்டி போடுகின்றனர். அதோடு படங்களின் தொலைக்காட்சி உரிமைக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். இப்படத்தின் தெலுங்கு தொலைக்காட்சி உரிமையை ஆங்கில கடைசி எழுத்தை பெயராகக் கொண்ட பிரபல சேனல் சுமார் 18 கோடி ரூபாய் வரை கேட்டுள்ளதாம். அதில் 2 கோடி ரூபாய் மட்டுமே அதற்கான வரியாகப் போய்விடுமாம். 'பாகுபலி' தெலுங்குப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விட இது அதிகம் என்கிறார்கள். தொலைக்காட்சி உரிமையே இப்படி என்றால் மற்ற உரிமைகள் என்ன விலை போகும் என டோலிவுட்டில் ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறார்களாம்.