ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
மலையாள சினிமாவில் உள்ள சில இரண்டாம்கட்ட மற்றும் வளரும் நடிகர், நடிகைகள் பலரும் விஜய்யுடன் இணைந்து நடித்துவிட வேண்டும் என்கிற ஆவலில் இருப்பவர்கள் தான். காரணம் மலையாள சினிமாவில் மலையாள முன்னணி ஹீரோக்களுக்கு இருக்கும் மாஸில் கொஞ்சம் கூட குறையாமல் விஜய்க்கும் இருப்பது தான். அந்த வகையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தில் வில்லன்களில் ஒருவராக விஜய்யுடன் இணைந்து நடித்தார் மலையாள வில்லன் நடிகரான பினீஸ் பாஸ்டின்.. விஜய்யுடன் நடித்த யோகமோ என்னவோ, இப்போது இவர் மலயாள சினிமாவில் ஹீரோவாக புரமோஷன் பெற்றுள்ளார்.
மலையாள சினிமாவில் கடந்த பத்து வருடங்களாக ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நடிகர் தான் பினீஸ் பாஸ்டின்.. மோகன்லால் நடித்த 'ஏஞ்சல் ஜான்' சமீபத்தில் வெளியான நிவின்பாலியின் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' ஆகிய படங்களில் எல்லாம் வில்லன் அவதாரம் போட்டவர்தான் இந்த பினீஸ். இப்போது 'மகா சம்பவம்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வரும் அக்-28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படம் ஸ்லம் பின்னணியில் நடக்கும் காமெடி கதையாக இது உருவாகி இருக்கிறது.. இதுதவிர, தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாகும் 'அடாவடி காதல்' என்கிற படத்திலும் நடிக்கிறார் பினீஸ் பாஸ்டின்.