வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாள நடிகர் கலாபவன் மணி இறப்பதற்கு முன் நடிக்க ஒப்புக்கொண்ட படம் தான் 'டபேதார்' இந்தப்படத்தில் கலாபவன் மணி நடிப்பதாக திட்டமிடப்பட்டு 2014ல் நடைபெற்ற அந்தப்படத்தின் பூஜையில் எல்லாம் கலாபவன் மணி கலந்துகொண்டார். ஆனால் கலாபவன் மணி மரணத்துக்குப்பின் டினி டாம் என்கிற குணச்சித்திர நடிகரை கதாநாயகன் ஆக்கி, படப்பிடிப்பை நடத்தி, இதோ வரும் வெள்ளிகிழமை ரிலீஸ் செய்யவும் போகிறார்கள். ஜான்சன் எஸ்தப்பன் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார்..
சமீபத்தில் கூட இந்தப்படத்தின் பாடல்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த இளையராஜா அதில் கதையின் நாயகனாக நடித்திருந்த 65 வயதான டபேதார் கேரக்டரையும் அதில் நடித்திருந்தவரையும் குறிப்பிட்டு இயக்குனரிடம் ரொம்பவே பாராட்டினாராம். ஆனால் படம் முடிந்ததும் அந்த கேரக்டராக நடித்த 44 வயதான டினி டாம் 'அது நான் தான்' என இளையராஜாவின் முன்னால் வந்து நிற்க, ஷாக்காகி விட்டாராம் இளையராஜா..
“உன் நடிப்பால் இந்தப்படத்தை ஒரு படி மேலே கொண்டுபோய் விட்டாய்.. என் இசையால் நானும் இன்னொரு படி இந்தப்படத்தை மேலே கொண்டுசெல்ல முயற்சிக்கிறேன்” என டினி டாமிடம் வாக்களித்தாராம் இளையராஜா.