வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் எம். எஸ்.தோனி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவரும் இப்படத்தை இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். ஹிந்தி நடிகர் சுஷ்காந்த் சிங் ராஜ்புட் தோனியாக நடிக்கும் இப்படத்தின் புரமோஷன் சென்னை, ஐதராபாத், மும்பை போன்ற இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவாக தெலுங்கு நடிகர் ராம் சரண் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம். ஐதராபாத்தில் நடைபெற்ற எம்.எஸ்.தோனி படத்தின் தெலுங்கு பாடல்கள் வெளியீட்டு விழாவில் ராம் சரண் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் ராம் சரண் எம்.எஸ்.தோனி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் தகவல் வெளிவந்துள்ளது. ஷான்ஜீர் எனும் ஹிந்தி படத்தின் வாயிலாக பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுத்த ராம் சரண் மேலும் ஒரு ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.