பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸ், அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை தவிர வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கிட்டதட்ட மூன்று வருடங்களாக பாகுபலி படத்திற்காக மட்டுமே உழைத்து வரும் பிரபாஸ், பாகுபலி -2 படத்திற்கு பின்னர் ரன் ராஜா ரன் படப்புகழ் இயக்குனர் சுஜீத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கவிருக்கும் இத்திரைப்படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் உருவாக்க இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளனர். பாகுபலி படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால், இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை சுஜீத் துவங்கிவிட்டாராம். இப்படத்தின் படப்பிடிப்புகளில் பிரபாஸ் நவம்பர் மாதத்தில் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது.