சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
டூ ஸ்டேட்ஸ் எனும் நாவலை மையப்படுத்தி அதே பெயரில் வெளியான ஹிந்தி திரைப்படம் டூ ஸ்டேட்ஸ். அப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அர்ஜூன் கபூர், அலியா பட் ஜோடி சேர்ந்து நடித்த அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை நிசாம் பகுதியைச் சேர்ந்த தயாரிப்பாளர் அபிஷேக் ரூ 55 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.
இப்படத்தில் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ரீல் ஜோடியான இவர்கள் விரைவில் ரியல் ஜோடியாக மாறவுள்ளனர். மேலும் தங்கள் காதல் கதைக்கு பொருத்தமான திரைப்படத்தையும் நடிக்க தேர்வு செய்துள்ளனர். டூ ஸ்டேட்ஸ் திரைப்படத்தில் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்த நாயகனும் நாயகியும் காதலில் விழுந்து லிவிங்க் டு கெதரில் இணைந்து வாழ்ந்து பின்னர் இரு வேறு கலாச்சரங்களைப் பின்பற்றும் தங்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வார்கள்.
இதேபோன்றதொரு காதல் கதையுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமந்தாவும், ஆந்திராவைச் சேர்ந்த நாகசைதன்யாவும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். இந்நிலையில் தங்கள் காதல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவுள்ளனர்.