ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராம் ராக்ஷி கண்ணா ஜோடி சேர்ந்து நடித்து வரும் ஹைப்பர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று(செப்டம்பர் 23) மாலை ஐதரபாத்தில் நடைபெற்றது. நடிகர் நானி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஹைப்பர் படத்தின் திரையரங்கு டிரைலரை வெளியிட்டார். இவ்விழாவில் இயக்குனர் ஹரீஷ் சங்கர், முரளி சர்மா, கிஷோர் திருமலா, ஹனு ரகவ்புடி உள்ளிட்ட டோலிவுட் பிரபலங்களுடன் ராம், ராக்ஷி கண்ணா, ஜிப்ரான், உள்ளிட்ட ஹைப்பர் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திய நானி, ராமின் திறமைக்கு ஏற்ப இப்படத்திற்கு ஹைப்பர் என பொருத்தமாக பெயரிட்டுள்ளனர் என்று கூறிய நானி தயாரிப்பு நிறுவனதார், இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு இத்திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ரீல்ஸ் என்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ஹைப்பர் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.