சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக மட்டுமல்லாமல் மொழி பேதம் இல்லாமல் அனைவரது மனதிலும் இடம் பெற்ற படம் 'பிரேமம்'. நிவின் பாலி, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த இந்தப் படம் தெலுங்கில் 'பிரேமம்' என்ற பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'மலரே...' பாடலை தெலுங்கில் 'எவரே..' என இடம் பிடித்துள்ளது. இந்த பாடலின் 90 வினாடி வீடியோவை சில நாட்களுக்கு முன்பு யு டியூப் இணையதளத்தில் வெளியிட்டனர்.
அவ்வளவுதான் 'பிரேமம்' மலையாளப் படத்தின் ரசிகர்கள் பொங்கி எழுந்துவிட்டனர். மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்கள் தெலுங்கு நாயகன் நாக சைதன்யாவையும், நாயகி ஸ்ருதிஹாசனையும் 'டிரோல்' செய்ய ஆரம்பித்தனர். எண்ணற்ற மீம்ஸ்களை சமூக வலைத்தளங்களில் பரவின. இதனிடையே, இந்தப் பாடலுக்கு எழுந்த நெகட்டிவ்வான கமெண்ட்டுகளைக் கண்ட படக் குழுவினர் யு டியூபில் உள்ள கமெண்ட் பகுதியை 'பிளாக்' செய்து விட்டனர். ஒரு பாடலுக்கே இப்படி கமெண்ட் அடிக்கிறார்களே, படம் வெளிவந்தால் என்ன செய்வார்களோ என்ற பயம் படக் குழுவினருக்கு வந்துவிட்டதாம்.
சில படங்களை ரீமேக் என்ற பெயரில் கெடுக்காமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது என்பது இனியாவது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரிந்தால் சரி.