'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படம், இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் என தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன் நடிக்கும் டீஜெ படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் டீஜெ படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கின்றார்.
ஹிந்தியில் வெளிவந்த மொகஞ்சதாரோ மற்றும் தமிழில் முகமூடி போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் முகமூடி படத்தின் படுதோல்வியால் தென்னிந்திய படங்களில் நடிக்க பூஜா ஆர்வம் காட்டவில்லையாம். இதனால் வேறு நடிகைகளை அணுக இயக்குனர் முடிவு செய்தார், நயன்தாரா, அனுஷ்கா, ரகுல் ப்ரீத்தி சிங், தமன்னா என அனைவரும் பல படங்களில் பிசியாக இருப்பதால் காஜல் அகர்வாலிடம் படக்குழு இப்படத்தில் நடிக்கக் கேட்டுள்ளது. ஹரீஷ் சங்கர் மற்றும் தில் ராஜூ, கைதி நம்பர் 150 படப்பிடிப்பு தளத்திற்கே நேராக சென்று காஜலிடம் கால்சீட் கேட்டுள்ளனர். காஜலும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்