ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாபு பங்காராம் எனும் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படத்தில் நடித்த வெங்கடேஷ் அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். மாதவன், ரித்திகாசிங் நடிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவந்த இறுதிச்சுற்று விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. தமிழ், ஹிந்தியில் இப்படத்தை இயக்கிய இயக்குனர் சுதா, தெலுங்கிலும் இப்படத்தை இயக்குகிறார். நடிகை ரித்திகா சிங் தெலுங்கிலும் அதே கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றார்.
இப்படத்திற்கு பின்னர் வெங்கடேஷ் நடிக்கும் படத்தை மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார். ஜீத்து ஜோசப் மோகன்லால் நடிப்பில் இயக்கிய த்ரிஷ்யம் திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. பாபநாசம் என்ற பெயரில் கமலஹாசன் நடிக்க ஜீத்து ஜோசப்பே த்ரிஷ்யம் படத்தை தமிழில் இயக்கினார். தெலுங்கில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் வெங்கடேஷ் நடித்திருந்தார். தற்போது ஜீத்து ஜோசப் கூறிய கதை பிடித்துப்போனதால் அப்படத்தில் நடிக்க வெங்கடேஷ் சம்மதம் தெரிவித்துள்ளாராம். தமிழில் கமல்ஹாசனை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்ததாக வெங்கடேஷை இயக்க தெலுங்கு திரை உலகம் செல்கிறார்.