'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழுக்கு தீபாவளி ரிலீஸ் போல, மலையாள திரையுலகத்தினருக்கு ஓணம் பண்டிகை ரிலீஸ் என்பது மிக முக்கியமானது.. தங்கள் படங்களை ஓணம் பண்டிகையன்று ரிலீஸ் செய்யவேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவு ஆகும். என்றாலும் இந்தமுறை 7 படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. இதில் போட்டி கடுமையாக இருக்கும் பட்சத்தில் வலியவனுக்கே வாய்ப்பு என்கிற ரீதியில் இந்தமுறை மோகன்லால், பிருத்விராஜ் ஆகியோரின் படங்கள் ஓணம் பண்டிகை ரிலீஸ் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டன.
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'ஒப்பம், 'ஜீத்து ஜோசப் டைரக்சனில் பிருத்விராஜ் கூட்டணி சேர்ந்து உருவாகியுள்ள 'ஊழம்' என இந்த இரண்டு படங்களும் தான் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கின்றன. நடிகர் குஞ்சாக்கோ போபனும் தனது சொந்த தயாரிப்பாக, தான் நடித்துள்ள ''கொச்சு பவுலோ ஐய்யப்பா கோயில்ஹோ' படத்தையும் ஓணம் ரிலீஸ் என அறிவித்துவிட்டார். சமீபத்தில் வெளியான திலீப்பின் 'பின்னேயும்' படம் சரியாக போகாததால், அவர் தற்போது நடித்து முடித்துள்ள 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' படத்தை ஓணம் ரேசில் கலந்துகொள்ள செய்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம்.
இதுதவிர வினீத் சீனிவாசன் நடித்துள்ள 'ஒரு முத்தச்சி கதா' அவரின் தம்பி தயன் சீனிவாசன் நடித்துள்ள 'ஒரேமுகம்' மற்றும் இவர்களுடன் தமிழில் இருந்து அம்பாக புறப்படும் விக்ரமின் 'இருமுகன்' என மொத்தம் ஏழு படங்கள் கச்சை கட்டிக்கொண்டு நிற்கின்றன. இதில் கடைசி நேரத்தில் சின்ன பட்ஜெட் படங்கள் இரண்டு மட்டும் ஜகா வாங்கினாலும் வாங்கலாம் என தெரிகிறது. சமீபத்தில் தான் மம்முட்டியின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியானதால் இந்த ஓணம் பண்டிகைக்கு அவரது படம் ரிலீசாகவில்லையாம்.