'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், சமுத்திரக்கனி நடித்து வெளிவந்த படம் 'விசாரணை'. ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டது. நடிகர் சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும், கிஷோருக்கு சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருதையும், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்திற்கான விருதையும் இந்தப் படம் பெற்றுக் கொடுத்தது. தமிழில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த இந்தப் படம் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
தமிழ்நாட்டிலிருந்து குண்டூருக்கு வேலைக்குச் செல்லும் சில இளைஞர்கள் காவல் துறையினரிடம் சிக்கிக் கொள்ள அவர்கள் அதிலிருந்து விடுபட்டார்களா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை. ஆட்டோ டிரைவராக இருக்கும் சந்திரகுமார் என்பவர் எழுதிய 'லாக்கப்' என்ற உண்மைக் கதையின் தழுவல்தான் இந்தப் படம்.
இயக்குனர் வெற்றிமாறன் உணர்வுபூர்வமாக இயக்கிய இந்தப் படம் தற்போது தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளரான கல்யாண் இந்தப் படத்தை 'விசாரண' என்ற பெயரில் வெளியிட உள்ளார்.