ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகளும் நடிகையுமான லக்ஷ்மி மஞ்சு தற்போது லக்ஷ்மி பாம் எனும் படத்தில் நடித்து வருகின்றார். மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் லக்ஷ்மி மஞ்சு இப்படத்தில் நீதிக்காகப் போராடும் இளம் நீதிபதியாக நடிக்கின்றார். ஜெகபதி பாபு நடித்த சத்யம், நவ்தீப் நடித்த வசூல் ராஜா போன்ற தெலுங்கு படங்களை இயக்கிய இயக்குனர் கோபால கிருஷ்ணா லக்ஷ்மி பாம் படத்தை இயக்குகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். 80% படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தீபாவளிக்கு இப்படத்தை திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கிறதாம். மௌனிகா சந்திரசேகர் மற்றும் உமா லக்ஷ்மி நரசிம்ஹா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுனில் கஷ்யப் இசையமைக்கின்றார்