நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
ஜூனியர் என்.டி.ஆருடன் சமந்தா ஜோடி சேர்ந்து நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தில் நடிகை தமன்னாவிடம் ஒரு பாடலுக்கு நடனமாட பேச்சுவார்த்தை நடைபெற்றது. மைத்திரி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கொரட்டாலா சிவா தயாரிக்கும் ஜனதா கேரேஜ் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் குத்தாட்டம் போட தமன்னா ரூ 40 லட்சத்திற்கும் மேல் சம்பளம் கேட்டுள்ளார். இதனால் இயக்குனர், குத்தாட்ட பாடலுக்கு காஜல் அகர்வாலை அணுகியுள்ளார். காஜல் அகர்வாலின் ஒரு நாள் சம்பளம் தமன்னாவை விட குறைவாக இருப்பதால் காஜலை ஒப்பந்தம் செய்ய சிவா தீர்மானம் செய்துள்ளாராம். ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் இப்பாடல் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. செப்டம்பர் 2ல் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஜனதா கேரேஜ் திரைப்படம் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.