சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
இயக்குனர் க்ரிஷ் இயக்கிய கஞ்சே படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த ப்ரக்யா ஜெய்ஸ்வால் தற்போது நாகார்ஜூனா நடிக்கும் ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் சத்யா இயக்கத்தில் நடிகர் மஞ்சு மனோஜ் நாயகனாக நடிக்கும் படத்தில் ப்ரக்யா நாயகியாக ஒப்பந்தமானார். திடீரென அப்படத்திலிருந்து ப்ரக்யா விலகி விட்டார். ப்ரக்யா வளர்ந்து வரும் நடிகை என்பதால் தொடர் தோல்விப்படங்களை கொடுத்த மஞ்சு மனோஜுடன் இணைந்து நடிக்க வேண்டாம் என நாயகிக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை கூறியதன் விளைவு தான் ப்ரக்யா இப்படத்திலிருந்து விலகியது என டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது. ஆனால் ப்ரக்யா கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் தொடர முடியவில்லை என காரணம் கூறி மஞ்சு மனோஜ் படத்திலிருந்து விலகி விட்டாராம். தற்போது படக்குழு நாயகி தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.