பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'பொய்' படத்தின் மூலம் அறிமுகமான விமலா ராமன் மலையாளத்தில் முன்னனணி நடிகை ஆனார். அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். சில ஆண்டுகளாக வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தவர் தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் 'ஒப்பம்' என்ற மலையாளப்படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் தெலுங்கில் பிரபல இயக்குனர் ராகவேந்திரராவ் இயக்கும் 'ஓம் நமோ வெங்கடேசா' என்ற பக்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் நாகார்ஜுனா, அனுஷ்கா ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள் விமலா ராமன் பெண் கடவுள் லட்சுமி வேடத்தில் நடிக்கிறார். இதற்கான ஆடிசன் சமீபத்தில் நடந்தது. அதில் விமலா ராமனுக்கு லட்சுமி வேடம் போட்டு பார்த்து ஓகே சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராகவேந்திரராவ். முறைப்படி நடனம் கற்றவரான விமலா ராமன் லட்சுமி, சரஸ்வதி வேடம் அணிந்து மேடையில் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பெண்ணான விமலா ராமனுக்கு தமிழில் வாய்ப்புகள் வருவதில்லை.