பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து வரும் அவரது 150வது படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் பரவி மெகா ஸ்டார் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். ஐதராபாத்தில் கத்திலான்டோடு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடைபெறுகின்றது. இந்நிலையில் கத்திலான்டோடு படத்தின் முதல் டீசர் சிரஞ்சீவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 22ல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் கத்திலான்டோடு படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். 2017 சங்கராந்தி பண்டிகையில் கத்திலான்டோடு படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.