இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகின்றார். ஆக்ஷன் கலந்த ரொமேன்டிக் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்த பூஜா தெலுங்கில் முகுந்தா, ஒக்க லைலா கோஸம் போன்ற படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ எனும் ஹிந்தி படத்தில் பூஜா நடித்துள்ளார். ஆகஸ்ட் 12ல் திரைக்கு வரவிருக்கும் மொகஞ்சதாரோ எனும் வரலாற்று திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் பூஜா அல்லு அர்ஜூனுக்கு நாயகியாக மீண்டும் டோலிவுட் பக்கம் திரும்புகின்றார் என கூறப்படுகின்றது. தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.