ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவந்து வசூலை அள்ளியது. குறிப்பாக தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு வசூலில் லாபம் ஈட்டியது. விஜய் ஆண்டனிக்கு டோலிவுட்டில் முதல் வெற்றியை பெற்று தந்த பிச்சைக்காரன் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்து வரும் சைத்தான் திரைப்படமும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து திரைக்கு வரவுள்ளதாம். வின் வின் வின் கிரியேசன்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் வேணுகோபால் சைத்தான் படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியுள்ளார். சைத்தான் என தமிழிலும் சேத்தான் என்ற பெயரில் தெலுங்கிலும் இப்படம் ஆகஸ்டில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பிரதீப் இயக்கும் சைத்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அருந்ததி நாயர் நடித்துள்ளார்.