பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர்கள் ஹீரோயின்களுக்கு சிபாரிசு செய்வது எல்லாம் ஒரு பெரிய விஷயமா என்றால், மலையாள சினிமாவை பொறுத்தவரை அது பெரிய விஷயம் தான். காரணம், நடிகர்களை பொறுத்தவரை தான் உண்டு, தனது நடிப்பு உண்டு என அனைவரும் ஒதுங்கிப்போகத்தான் செய்வார்கள். அதையும் மீறி அவர்கள் ஒரு நடிகைக்கு சிபாரிசு செய்கிறார்கள் என்றால் அது கதையின் நாயகி கேரக்டருக்கு அவர் சரியாக வருவார் என்பதனால் தான் இருக்கும். நடிகர் ஜெயசூர்யா நடிகை ஸ்ருதி ராமச்சந்திரனுக்கு சிபாரிசு செய்துள்ளதையும் அந்த விதமாகத்தான் கருத்தில் கொள்ளவேண்டும்.
கடந்த வருடம் துல்கர் சல்மான் நடித்த 'ஞான்' என்கிற பீரியட் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர்தான் இந்த ஸ்ருதி ராமச்சந்திரன். தற்போது 'பிரேதம்' என்கிற படத்தில் ரஞ்சித் ஷங்கர் டைரக்சனில் நடித்து வரும் ஜெயசூர்யா, ஸ்ருதியை அழைத்து அதில் உள்ள இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும்படியும், அது ஸ்ருதியின் கேரியருக்கு உதவும் என்றும் சொன்னாராம். இயக்குனரும் ஸ்ருதிக்கு ஒகே சொல்லிவிட்டாராம். இந்தப்படத்தில் 'பிரேதம்' ஆக நடிப்பவர் ஸ்ருதிதானா என்றால் அது மட்டும் சஸ்பென்ஸ் என்கிறார் ஸ்ருதி ராமச்சந்திரன்.