600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தமிழில் தொடர்ந்து நிக்கி கல்ராணி நடித்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. இன்னும் சில தமிழ்ப்படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார். அதேசமயம் தன்னை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி, முகவரி தந்த மலையாள சினிமாவையும் அவர் மறக்க தயாராக இல்லை. கடந்த வருடத்தில் மலையாளத்தில் நிக்கி கல்ராணி நடித்த மூன்று படங்கள் வெளியாகின. மூன்றுமே பெரிய அளவில் ஓடவில்லை தான். ஆனாலும் நிக்கி கல்ராணிக்கு தான் நடித்த வேடங்கள் அனைத்துமே திருப்தி தானாம்.
இந்த வருடமும் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக தற்போது 'டீம் 5' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல், குஞ்சாக்கோ போபன் மற்றும் ஜெயசூர்யா இருவரும் இணைந்து நடிக்கும் ஷாஜகானும் பாரிகுட்டியும் என்கிற படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஆனால் வலுவான தெரசியம்மா புன்னோஸ் என்கிற கஸ்டம்ஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளாராம் நிக்கி. ராஜம்மா @ யாஹூ என்கிற படத்தில் ஏற்கனவே குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து நடித்திருந்தார் நிக்கி கல்ராணி.. ஆனாலும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நடிப்பவர் சாட்சாத் அமலாபால் தான்.