‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கிட்டத்தட்ட நாடோடிகள் மற்றும் வெற்றிவேல் என இரண்டும் கலந்த சசிகுமார் கேரக்டர்போலத்தான் மலையாள இயக்குனர் கம் நடிகருமான வினீத் சீனிவாசன். பாசம், நட்பு என வரும்போது அவர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார். இயக்குனராக மாறியபோது நண்பர்களான நிவின்பாலி, காமெடி நடிகர் அஜூ வர்கீஸ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை மேலே ஏற்றிவிட்டார்.. தனது தம்பி தயன் சீனிவாசன் நடிக்க வேண்டும் என சொன்னபோது அவருக்காக கதை எழுதி, 'திர' என்கிற படத்தை இயக்கினார்.. அவருக்கும் இன்னும் நல்ல அறிமுகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக 'குஞ்சிராமாயணம்' படத்தில் அவருடன் இணைந்து நடித்தார்.
இன்னொரு பக்கம் அவரது உதவி இயக்குனராக இருந்த பிரதீப், தான் இயக்குனராக மாறப்போவதாக சொன்னபோது அவருக்கு 'ஒரு வடக்கன் செல்பி' என்கிற கதை எழுதி, அதற்கு திரைக்கதை எழுதியும் கொடுத்தார். போதாதென்று தனது நண்பர்கள் நிவின்பாலி, அஜூ வர்கீஸ் ஆகியோருடன் சேர்ந்து தானும் அந்தப்படத்தில் நடித்துக்கொடுத்து படத்தை 100நாள் வெற்றிவிழா படமாக்க உதவினார். அதேபோல இப்போது வினீத்தின் நண்பரும், அவரது உதவி இயக்குனருமான கணேஷ்ராஜ் என்பவருக்கு உதவி செய்வதற்காக இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார்.
கணேஷ்ராஜ் சொன்ன 'ஆனந்தம்' என்கிற கதை வினீத் சீனிவாசனுக்கு பிடித்துப்போக அந்தப்படத்தை தானே தயாரிப்பதாக சொல்லி, 'ஹேபிட் ஆப் லைப்' என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.. பிரபல இயக்குனரான லால்ஜோஸ், தனது லால்ஜோஸ் பிலிம்ஸ் மூலம் இந்தப்படத்தை வெளியிடுவதாக இப்போதே ஒப்பந்தமும் செய்துவிட்டதால் உற்சாகத்துடன் தயாரிப்பாளராக மாறிவிட்டார் வினீத் சீனிவாசன்.