பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த வருடம் அஜித் நடிக்க சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் 'வேதாளம்' படம் வெளியானது.. படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ருதிஹாசனை விட, அஜித்தின் தங்கையாக நடித்த லட்சுமி மேனனுக்கே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பகட்டத்தில் இருந்தபோது அஜித்தின் தங்கையாக நடிக்க ஸ்ரீ திவ்யா, நித்யா மேனன் என சில நடிகைகளிடம் பேசப்பட்டது.. ஆனால் அனைவரும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க தயாராக இருந்தார்களே தவிர தங்கையாக நடித்து தங்கள் கனவை சிதைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் லட்சுமி மேனன் மட்டும் தைரியமாக முன் வந்து நடித்து, பாராட்டுகளையும் பெற்றார்.
அதேசமயம் தமிழில் எத்தன், ரேணிகுண்டா, அழகுராஜா ஆகிய படங்களில் நடித்திருந்த மலையாள நடிகையான சனுஷாவையும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும்படி வாய்ப்பு தேடிவந்ததாம். ஆனால் அவர் ஆர்வமாக இருந்தும் கூட, அவரது தம்பியான மாஸ்டர் சனூப் அதற்கு தடைபோட்டு விட்டாராம்.. அவரது தம்பிதான் சனுஷாவின் படங்களுக்கு முதல் விமர்சகராம். அதற்கு முன் ஒரு படத்தில் சந்தானத்தின் தங்கையாக கூட சனுஷா நடித்திருந்தாலும், இனி நீ தங்கை கேரக்டரில் நடிக்காதே என தம்பி சனூப் அன்புக்கட்டளை போட்டதால் அதை தட்ட முடியாமல் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம் சனுஷா. ஆனால் அஜித்துக்கு தங்கையாக நடிக்க மறுத்துவிட்டேன் என இவர் சொல்வது நம்பும்படியாகவா இருக்கிறது..?