Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இந்தியில் ரீமேக்காகிறது மோகன்லாலின் 'தன்மாத்ரா'...!

01 மே, 2016 - 15:49 IST
எழுத்தின் அளவு:
thanmathra-movie-of-mohanlal--is-to-be-remaded-in-hindi

அல்சீமர் என்கிற நோய் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது ஞாபகங்களை மறந்து தங்களது சுற்றுபுறத்தில் உழவர்களை, அவ்வளவு ஏன் குடும்பத்தினரை கூட மறந்துவிடும் நிலைக்கு ஆளாகி விடுவார்கள்.. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு, மலையாளத்தில் 'தன்மாத்ரா' என்கிற படம் இதை மையப்படுத்தி வெளியானது. இந்தப்படத்தில் இப்படிப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட மத்திய வயது நபராக அற்புதமாக நடித்திருந்தார் மோகன்லால். நல்ல ஞாபக சக்தியுள்ள மோகன்லால் இந்த நோயின் பாதிப்புக்கு ஆளான பின்னர், தான் வேலை பார்க்கும் அலுவலகம் என்பதை மறந்து அங்கேயே குளித்துவிட்டு உள்ளாடையுடன் நடத்து வருவார் என்றால் இந்த நோயின் தாக்கத்தையும் அதில் அபாரமாக நடித்த மோகன்லாலின் நடிப்பையும் அறிந்துகொள்ளலாம்.


இந்தப்படத்திற்கு தேசிய விருதும், மோகன்லாலுக்கு சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருது உட்பட பல விருதுகளும் கிடைத்தன. இப்போது இந்தப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் பிளஸ்சி.. மோகன்லால் நடித்த கேரக்டரில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாகவும் ஸ்கிரிப்ட் பணிகள் முடிவடைந்தபின்னர் தான் அதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்களை அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார் இயக்குனர் பிளஸ்சி. அப்படியானால் இவர் பிருத்விராஜை வைத்து இயக்குவதாக அறிவிக்கப்பட்ட 'ஆடு ஜீவிதம்' அவ்வளவுதானா..? இல்லையில்லை. 'தன்மாத்ரா' ரீமேக்கை முடித்துவிட்டு இந்தப்படத்தை இயக்கவுள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in