'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நிதின் சமந்தா ஜோடி சேர்ந்து நடிக்கும் காதல் கதையம்சம் கொண்ட அ.ஆ படத்தின் திரையிடும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. முதலில் இப்படம் மே 7ல் திரைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால் மகேஷ் பாபுவின் பிரம்மோற்சவம் படம் திரைக்கு வருவதால் அ.ஆ படத்தின் திரையிடும் தேதியை மாற்றுவதாக தயாரிப்பு நிறுவனத்தார் கூறினார். அதன்படி அ.ஆ திரைப்படம் மே 27 ஆம் தேதி திரைக்கு வரும் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகின்றது. தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணா தயாரிக்கும் இப்படத்தில் நிதின் சமந்தாவுடன் நரேஷ், நதியா, பிரம்மானந்தம், அலி, ஈஷ்வரி ராவ், அனன்யா, ஸ்ரீநிவாஸ், ராவ் ரமேஷ், ரகு பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.