'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு திரை உலகின் ஸ்டையில் ஹீரோ அல்லு அர்ஜுனின் தம்பியான அல்லு சிரிஷ் சோலோ பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் காதல் மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு சுட்டலப்பயி என பெயரிடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது இப்படத்திற்கு 'ஸ்ரீரஸ்து சுபமஸ்து' என பெயரை மாற்றி பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். புதிய தலைப்புடன் கூடிய இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினமான இன்று வெளிவந்துள்ளது. அல்லு சிரிஷிற்கு ஜோடியாக லாவண்யா திரிபதி நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரகதி, ராவ் ரமேஷ் என டோலிவுட்டின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.