இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த வருடம் நடிகைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அது நயன்தாராவின் ஆண்டு என அடித்து சொல்லலாம். காரணம் தமிழ், மலையாளம் இரண்டிலும் சேர்த்து ஏழு படங்களில் நடித்தார் நயன்தாரா. மாசு என்கிற மாசிலாமணி மற்றும் 'நன்பேண்டா ஆகிய படங்கள் சறுக்கினாலும் அவர் நடித்த மற்ற படங்கள் வெற்றிக்கனியை ருசித்தன. நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது சொந்த மொழியான மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் நடிக்க தேடிவந்த வாய்ப்பை அவர் மறுக்காமல் ஏற்றுக்கொண்டாரே அந்த நல்ல எண்ணம் தான் மறுபடியும் மம்முட்டியுடன் இன்னொரு படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் அவருக்கு பெற்று தந்தது.
அந்தப்படம் தான் இன்று வெளியாகியுள்ள 'புதிய நியமம்'.. வழக்கமான மாடர்ன் கேர்ள் கதாபாத்திரமாக இல்லாமல் ஒரு பெண்குழந்தைக்கு தாயாக குடும்பத்தலைவியாக வாசுகி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் நயன்தாரா. இதில் அவர் பரத நாட்டிய கலைஞராக நடிக்கிறார். லூயிஸ் போத்தன் என்கிற லாயர் கதாபாத்திரத்தில் நயன்தாராவின் கணவராக நடிக்கிறார் மம்முட்டி. இந்த வருடத்தின் நயன்தாராவின் முதல் படமாக மலையாளத்தில் வெளியாகியுள்ள இந்த 'புதிய நியமம்' நயன்தாராவின் இந்த வருட கணக்கை வெற்றிகரமாக துவக்கி வைக்கும் என எதிர்பார்க்கலாம்.