இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
யுகாதி எனும் தெலுங்கு வருட பிறப்பை ரசிகர்களுடன் கொண்டாட டோலிவுட் பிரபலங்கல் தயாரகி வருகின்றனர். டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் தான் நடித்து வரும் சரைனொடு படத்தை யுகாதியில்(ஏப்ரல் 8) வெளியிட திட்டமிட்டுள்ளார். அதே போல் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பலவித எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் சர்தார் கபார் சிங் படத்தையும் யுகாதி என்று திரைக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனத்தார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். மகேஷ் பாபுவும் யுகாதி அன்று தான் நடித்து வரும் பிரம்மோற்சவம் படத்தின் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளார். ஏப்ரல் 8 ஆம் தேதி திருப்பதியில் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது. இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கி வரும் பிரம்மோற்சவம் படத்தில் சமந்தா,காஜல் அகர்வால், பிரணிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.