ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தர் தேவயானி. கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். அதன் பின்னர் தன்னை வைத்து 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' படத்தை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அடுத்து தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடித்து சின்னத் திரையிலும் புகழ் பெற்றார். தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு வெளிவந்த 'சகாப்தம், ஸ்ட்ராபெர்ரி' ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஆனால், இந்த முறை நடிக்கப் போவது தமிழில் அல்ல, தெலுங்கில். ஜுனியர் என்டிஆர், சமந்தா, மோகன்லால் மற்றும் பலர் நடிக்க உருவாக உள்ள 'ஜனதா காரேஜ்' படத்தில் தேவயானி, மோகன்லால் ஜோடியாக நடிக்க உள்ளாராம். மோகன்லால் ஜோடியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகும், 13 வருடங்களுக்குப் பிறகு ஒரு தெலுங்குப் படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.