ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கேரக்டருக்கு தேவை என்றால் தமிழ் நடிகர்கள் கூட பொசுக்கு பொசுக்கென மொட்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால் மலையாள நடிகர்கள் அந்த விஷயத்தில் ஜாக்கிரதையாகத்தான் இருப்பார்கள். எங்கேயாவது, எந்தப்படத்திலாவது மோகன்லாலையோ, மம்முட்டியையோ மொட்டைத்தலையுடன் பார்த்ததாக ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு..? ஆனால் திலீப், சுரேஷ்கோபி போன்றவர்கள் கேரக்டருக்கு தேவை என்றால் மொட்டை போட தயங்கமாட்டார்கள். இப்போது பஹத் பாசிலும் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
அவரது தலை ஏற்கனவே கிட்டத்தட்ட அப்படித்தானே இருக்கிறது என டக்கென கிண்டலாக வாயை விட்டுவிடாதீர்கள். முன்னணி நடிகர்களே விக் வைத்துக்கொண்டு அல்லது முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு வலம் வரும் மலையாள சினிமாவில், அரை வழுக்கையுடன் வலம் வரும் பஹத் பாசிலின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.. இப்போது புதிய படம் ஒன்றுக்காக துணிந்து மொட்டையும் அடித்திருக்கிறார் பஹத் பாசில்.. இந்த கெட்டப் தான் இப்போது மலையாள ரசிகர்களின் ஏகோபித்த வரவைப்பெற்று வைரலாக மாறியுள்ளது.