தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலி மற்றும் சோனல் சௌக்கானுடன் இணைந்து டூயட் பாடும் திரைப்படம் டிக்டேட்டர். இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது. டிக்டேட்டர் படத்தின் சண்டை பயிற்சியாளராக ரவி வர்மா ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் வெளிவரவிருக்கும் ராய்ஸ் படத்தில் ரவி வர்மா பணியாற்றவுள்ளார். கன்னடத்தில் வெளியான பாக்ஸர், தெலுங்கில் வெளிவந்த அகில் போன்ற படங்களிலும் ரவி வர்மா தனது திறமையை நிரூபித்தவர். இவரது இயக்கத்தில் சண்டைக் காட்சிகள் புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என படக்குழு கூறுகின்றது. இசையமைப்பாளர் தமன் இசையில் உருவாகியுள்ள பாடல்களின் வெளியீட்டு விழா ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில் டிசம்பர் 20ல் நடைபெறவுள்ளது. ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.