நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
அந்த புற்றில் இருந்து எந்த பாம்பும் கிளம்பாது என்று நினைத்த பலருக்கும் இது ஷாக்கிங் நியூஸ் தான்.. ஆம்.. மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கும் விளம்பரப்பட இயக்குனருக்கும் காதல் என்று கசிந்த பகீர் செய்திதான் அது. மஞ்சு வாரியர் தனது கணவர் திலீப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தனியே வாழ்ந்து வருகிறார்.. இதுநாள் வரை திலீப்பையும் நடிகை காவ்யா மாதவனையும் இணைத்து தான் கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன.. சொல்லப்போனால் இந்த காதல் தொடர்பால் தான் மஞ்சு வாரியர் திலீப்பை விட்டே விலகினார் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.
ஆனால் இப்போதோ மஞ்சுவுக்கு இன்னொரு நபருடன் காதல் என்பது சற்றே அதிர்ச்சி தருவதாகத்தான் இருக்கிறது. இது ஏன் ஒரு வதந்தியாக இருக்க கூடாது என இந்த விஷயத்தை ஒதுக்கிவிடவும் முடியாது என்கிறார்கள். காரணம் சம்பந்தப்பட்ட விளம்பரப்பட இயக்குனரின் மனைவி இவர்கள் காதல் விவகாரம் அறிந்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளாராம். அதன்பின்னர்தான் இவர்களது காதல் விவகாரம் வெளிப்பட்டுள்ளதாம். இத்தனைக்கும் அந்த இயக்குனருக்கு இரண்டு குழந்தைகள் வேறு இருக்கிறார்களாம். விவாகரத்து பெற்ற மஞ்சு வாரியாருக்கு இன்னொருவரை காதலிக்கும், கல்யாணம் செய்துகொள்ளும் உரிமை இருந்தாலும், இத்தகைய காதல் ஏற்புடையதல்ல என்றே தோன்றுகிறது.