இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டிஎஸ்பி என அறியப்படும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தமிழ், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போன்றோர் ஹீரோவாகிவிட்ட நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் அந்த ஆசை வந்துள்ளது. S/O சத்யமூர்த்தி உள்ளிட்ட பல தெலுங்கு படங்களிலும் வெடி எனும் தமிழ் படத்திலும் பாடல்களில் நடனமாடிய தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக மாறவுள்ளாராம். டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குனர் சுகுமார் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும். தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறபடுகின்றது. சுகுமாரின் ஆர்யா தொடங்கி குமாரி 21F வரை அணைத்து படங்களிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தே இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இதனால் திரை உலகம் தாண்டியும் இருவரும் நல்ல நண்பர்களாக அறியப்படுகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத்துடன் காதல் கிசுகிசுகளில் அடிபட்ட நடிகை சார்மி இப்படத்தில் நாயகியாக நடிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.