இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட்டின் பிரபல நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமான அகில் : தி பவர் ஆப் ஜுவா திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. அகிலின் அறிமுகப் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான இப்படத்தை விநியோகஸ்தர்கள் பெரும் தொகைக்கு வாங்கினார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிய இப்படம் வசூலிலும் தோல்வியைத் தழுவியது. இதானல் இப்படத்தின் இயக்குனர் விவி விநாயக் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு வழங்க முன்வந்துள்ளார். டோலிவுட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் அகில் பட விநியோகஸ்தர்களுக்கு இயக்குனர் விவி விநாயக் ரூ 4 கோடி வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விசாக் மற்றும் நிசாம் பகுதி விநியோகஸ்தர்களுக்கு முதலில் இழப்பீடு வழங்கப்படும் என கூறப்படுகின்றது. மேலும் இப்படத்திற்கான தான் சம்பளமாக வாங்கிய ரூ.3 கோடியையும் தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுக்கவுள்ளாராம் விவி விநாயக்