நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
அனுஷ்கா மற்றும் ஆர்யாவின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 27ல் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் இஞ்சி இடுப்பழகி. பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் இயக்கியுள்ள இப்படம் சைஸ் ஜீரோ என்ற பெயரில் தெலுங்கில் திரைக்கு வருகின்றது. குண்டான உடல் தோற்றத்துடன் அனுஷ்கா நடிக்கும் இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானவில் என உலகம் முழுவதும் இப்படம் 1500 திரையரங்குகளில் இப்படம் திரைக்கு வரவுள்ளதாம். அதிலும் அமெரிக்காவில் மட்டும் 100 திரையரங்குகளில் இப்படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் அத்திரையரங்குகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.